பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர் ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில...
1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.
3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.
4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.
5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்
6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.
7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.
8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.
9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.
10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.
12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.
ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண்னுக்கு அவனை பிடித்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...
அவசியம் படிங்க...
ஈரோடுட்டில் வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010
ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண்னுக்கு அவனை பிடித்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...
அவசியம் படிங்க...
ஈரோடுட்டில் வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010
45 comments:
வடை எனக்கே ..!!
ரொம்ப அனுபவம் போலயே
என்ன மாறி சின்ன பசங்களுக்கு எல்லாம் கொஞ்ச வருஷம் கழிச்சு தான் தேவ படும் (ஹப்பா, கேப்ல நம்ம சின்ன பையன்னு சொல்லியாச்சு)
Arun Prasath said...
என்ன மாறி சின்ன பசங்களுக்கு எல்லாம் கொஞ்ச வருஷம் கழிச்சு தான் தேவ படும்///
எனக்கும்தான் சார்
உண்மை தான்... இதில் கூறிய அத்தனை விசயங்களும் உண்மை...
நல்லாத் தான் இருக்கிறது போங்க...
அருமை... அருமை... பதிவர் சந்திப்பில் பார்த்தேன் இம்புட்டு நல்லாயிருக்கு...
தகவல் அருமை
அப்படியா..? எனக்கு இப்போதுதான் தெரிந்தது.. இனி இதுபோல் நடக்கப் பார்க்கிறேன்.. பழகுகிறேன்..! நன்றி..!
கலக்கலா இருக்குங்க!
செல்வா வடை, சுடுசோறு இரண்டும் உனக்குத்தான்...
வாங்க கார்த்திக்குமார்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க வெறும்பய
உங்களுக்கும் அனுபவந்தானா....
வாங்க அருண்...
அனுபவமே பதிவு...
வாங்க யாதவன்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
பெண்கள் - அருவருப்பானவர்கள் என் அகராதியில்... :-)
வாங்க உண்மைத்தமிழன்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க ம.தி.சதா..
இன்னிக்கு உங்க சோத்தை செல்வா தாட்டிட்டாரு...
// மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.
//
வெளங்கீரும் ., எப்படியோ நீங்க சொன்னா விசயங்கள் எனக்கும் பயன்படும் அண்ணா .!! ஹி ஹி ஹி
சரிங்க இன்னொரு தடவை அந்த மாதிரி முயற்சி பண்ணறங்க
சில கருத்துகள் நிஜம்.. மரியாதை எதிர்பார்ப்பார்கள்..
--------
krish said...
பெண்கள் - அருவருப்பானவர்கள் என் அகராதியில்... :-)//
பாவம் ரொம்ப வாங்கி கட்டியிருப்பார் போல.. :)
என்னவோ போங்க சங்கவி ...
//பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.//
பதில் தான் அளிக்கவேண்டுமா ?
மதிப்பு ....
ஏங்க இப்படி ...
//மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.//
ம் ...
அப்பவே இதை எனக்குச் சொல்லி கொடுக்காம விட்டுட்டாய்ங்களே....!
பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்////////
ஐயோ! எனக்கு பொய் சொல்ல தெரியாதே! நான் என்ன பண்றது?!!!
ennathu gandhi thaaththaa seththupoittaaaraaa
erode pathivar santhipiRkku enakku azaippu anuppaathathai naan vanmaiyaaga kandikkureann
/// உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.//
ரொம்பக் கஷ்டம்.
//ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். //
அதைவிடக் கஷ்டம்.
//புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.//
சுத்தம் ......நான் அவுட்.
நல்ல பதிவு...அப்புறம் லிங்க் கொடுத்தத்ற்கு நன்றி
உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்//
இது தினசரி நடந்தா..?@அப்பாவி கணவன்கள் சங்கம்
//ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண்னுக்கு அவனை பிடித்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...//
உண்மையான கருத்து சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை
தொடரட்டும் உங்கள் பணி
ரொம்ப நல்லாயிருக்குங்க!
//சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்//
அலட்டல் இல்லாத, புத்திக்கூர்மையுள்ள ஆண்களை எல்லோர்க்கும் பிடிக்கும்..
இது பற்றிய எங்களின் நேற்றைய பதிவு படித்தீர்களா?
http://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_05.html
.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
.....ரைட்டு!
.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.
>>>அப்போ என்னை எந்தப்பொண்ணுக்கும் பிடிக்கதா?அவ் அவ் அவ்
I'm also escaped in 12th std. thanks for information
பெண்களுக்கு இவ்வளவு சப்போட்டா. ம்ம்ம்.. நாமெல்லாம் தான் பாவம் ஹும்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. @ வருத்தமில்லா கணவர்கள் சங்கம்
நல்ல ஆராய்ச்சி :-)))))
ம்ம்ம்....
அத்தனையும் உண்மை சங்கவி !
பல பாய்ண்டுகள் உண்மையே
கடைசி லிங்கில் ஈரோடுடில் என உள்ளது. ஈரோட்டில் என மாற்றவும்
11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்//
இத படிச்ச பிறகு தான் உயிரே வந்துச்சு,,..
சங்கவி! நல்லதொரு பதிவு, வாழ்த்துக்கள்..
நல்ல பகிர்வு சார் நன்றி
என்ன பிடிக்குமா உங்களுக்கு பிடிச்சிருந்தா வாங்க பாஸ்
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_06.html
//வடை எனக்கே ..!! //
ஹேய்.........................வடை வாங்கிய மா[[ப்பூ]] வீரன் வாழ்க.......
அவன் மொக்கை வாழ்க......:]]
பெண்களுக்கு ஆண்களிடத்தில் வர வேண்டிய முக்கியமான இரண்டு எண்ணங்கள் பாதுகாப்பும் நம்பிக்கையும் தான்.
இவன் தன்னை எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான் என்று அவளுக்குத் தோன்ற வேண்டும்.
நம் வாழ்க்கையை இவனிடத்தில் தாராளமாக ஒப்படைக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இவை மட்டும் ஒருவனிடத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுவிடின் கடைசிவரை அவள் அவனிடத்தில் அன்பால் கட்டுண்டுகிடப்பாள்.
Post a Comment