ஏற்கனவே பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்ற பெயரில் சில பழமொழிகளை தொகுத்து ஒரு பதிவாக்கி இருந்தேன். மீண்டும் சில பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளேன் இப்பதிவில்.
பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்லலாம் தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், மூதுரை , சொலவடைஎன்றும் கூறுகின்றனர்.
பழமொழியை கிராமத்தில் இருப்பவர்கள் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் முன் போல் இல்லை இப்போது குறைந்து உள்ளது. பழமொழி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
நடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு
பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
எந்தவிதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும். கொண்ட நோக்கத்தை மறந்து விட்டுக் கவனத்தை வேறொன்றில் செலுத்தல் கூடாது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை அப்பொருளோ அவரோ
இல்லாத போதுதான் வெளிப்படும்.
இல்லாத போதுதான் வெளிப்படும்.
அடாது செய்பவன் படாது படுவான்
தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்
கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு
பொதுவாக இது நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மறுமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து , தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருக்கிறது.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை அதுவல்ல,
அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான் .
அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான்.
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்
ஒரேயொரு வார்த்தை மாறினால் எப்படி தம் வசதிப்படி பழமொழிக்கு விளக்கம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட பழமொழியும் ஒரு சான்று .சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது .
ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு .
நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். சில பழமொழிகள் இடம் மாற்றிப் பொருள் கொண்டோமானால்தான் அர்த்தம் விளங்கும். இது பற்றி இலக்கணப் பாடத்தில் இடம்மாற்றிப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஒரு பகுதியே தனியாக இருக்கிறது.
பழைய இஞ்சியில் காரம் அதிகம்
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்
தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்
போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம் தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது
25 comments:
அருமையான பதிவு சகோதரா... வாழ்த்துக்கள்..
ஃஃஃஃஃஊரு கெட நூல விடுஃஃஃஃ
இதன் விளக்கத்தை கொஞ்சம் தெளிவாக்கித் தர முடியுமா..??
இதுல நெறையா எங்க பாட்டி இன்னும் உபயோகபடுத்தீட்டு தான் இருக்காங்க
நல்ல தொகுப்பு தொடர்ந்து இம்மாதிரி தேர்ந்தெடுத்து எழுதுங்கள்..
ம் ம் கலக்குங்க
Nice
இதை பழமொழிகள் என்பதே தவறு, இதில் பெரும்பான்மையானவை இன்றைய நட்டு நடப்புக்கும் பொருத்தமானதுதான்!!! இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான பதிவு!!!!
அருமையான தொகுப்பு..
அருமை!
அருமையன பகிர்வு நன்பரே...சில பழமொழிகளுக்கு இன்னும் தெளிவான விளக்கங்கள் சொல்லி இருக்கலாம்...வரும் பதிவுகளில் எதிர் பார்கிறோம் வாழ்த்துகள்....
good post
//சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது //
ஓ , இதுக்கு இதுதான் அர்த்தமா .. ?
இதுல பாதி பழமொழிகள் நம்ம ஊர்ப் பக்கம் அடிக்கடி கேக்குரோம்ல அண்ணா ..!! நல்லா இருக்கு ...!!
நன்றி நண்பரே இதுநாள் வரை பல பழமொழிகள் பற்றி நன்கு தெரியும் ஆனால் அதன் விளக்கங்கள் தெரிந்ததில்லை . இன்று உங்களின் பதிவு அதையும் பூர்த்தி செய்துவிட்டது . பகிர்வுக்கு நன்றி
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது//
இதை பல சாமியார்களிடம் சொல்ல வேண்டும்
/
விளக்கங்களுடன் கூடிய நல்ல தொகுப்பு.. தொடர்ந்து எழுதவும்.. நன்றிங்க..
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா....
இதற்கு பொருள் என்ன?
அருமையான தொகுப்பு... பழமொழிகள் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் விளக்கங்கள் இப்போது தான் கேட்க்கிறேன்.. தொடருங்கள்..
good ones. thanks.
சொலவடை ருசியாய் இருக்கு.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை அதுவல்ல,
.....கமா போட்டு அப்படியே விட்டுட்டீங்களே.....சரியான விளக்கம் சொன்னால் தெரிந்து கொள்ளுவோமே. நன்றி.
Nice explanations for the palamozhis we heard. I heard most of these growing up with my grand parents. I guess we need to compile like this for this generation kids who miss the luxury of living with grand parents. Great job
யப்பா! எவ்வளவு பழமொழிகள்..
சிறப்பான விளக்கங்கள்..
//உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்//
என்னா ஒரு வில்லத்தனம்???
"எட்டுமணி பஸ்சு எட்டு மணிக்கு வந்துச்சாம் பத்து மணி பஸ்சு பத்து மணிக்கு வந்துச்சாம்"
இது எப்புடி இருக்கு
மிக சுவாரசியமான பதிவுங்க..........நல்லாயிருக்கு...
Post a Comment