HIV தாக்கினால் என்ன செய்வது அதை எப்படி கையாள வேண்டும் என நான் திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை அவசியம் என்று ஒரு பதிவு இட்டு இருந்தேன் அதற்கு பல பின்னூட்டங்களிலும், மெயிலிலும் வருத்தப்பட்டும் அடுத்து என்ன செய்யலாம் என்றும் பல நண்பர்கள் சில அறிவுரைகள் கூறி இருந்தனர் அவர்களுக்கு என் சார்பிலும் என் நண்பன் சார்பிலும் நன்றி...
என் நண்பனின் தங்கை ரிசல்ட் வாங்கி சென்ற அடுத்த நாள் அவரே யாருக்கும் தெரியமால் அந்த ரிசல்ட்டைப் பார்த்து விட்டார். நல்ல தைரியமாகத்தான் இருக்கிறார். இதற்கு என்ன வழி என்று பலரிடம் ஆலோசனை கேட்டு நண்பரிடம் விளக்கினேன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மாதம் 8 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறி இருந்தார்கள் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம் என்று சொன்னார்கள் நண்பனின் மாத வருமானம் குறைவு தான் தனது குடும்பத்தையும் பார்க்க வேண்டும் தங்கையையும் பார்க்க வேண்டும் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவில் அரசு மருத்துவமனைதான் சரி என்று முடிவு செய்தோம்.
கோவை அரசுமருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்திற்கு சென்றோம் அங்கு காலை 8 மணிக்கு ஒரு 10 பேர் காத்திருந்தனர் அங்கு இருந்த அதிகாரியிடம் இவர் என் நண்பர் அவரின் தங்கை என நடந்த அனைத்தையும் சொன்னேன். பொறுமையாக கேட்டு அருமையாக பதில் சொன்னார். ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும் மிக புரியும் படி விளக்கினார்.
நீங்கள் தனியாரிடம் பரிசோதனை செய்ததை நாங்கள் எடுத்துக்க மாட்டோம் நாங்கள் இங்கு இரத்தப் பரிசோதனை செய்து உங்கள் இரத்தத்தில் வைரஸ் கலந்து இருந்தால் அதற்கு அடுத்து இன்னும் சில பரிசோதனை செய்து இங்கு உள்ள மருத்துவர் இது வைரஸ் என்று உறுதி செய்த பின் தான் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று சொல்வார். உங்களுக்கு வைரஸ் இருப்பது உறுதியானலும் அது எந்த நிலையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து அதற்கு தகுந்த மருந்துகள் கொடுப்போம் என்றார். இது ஆரம்ப நிலையில் இருந்தால் நீங்கள் சத்துள்ள உணவு வகைகள் மற்றும் எந்த நோயும் தாக்காமல் பாதுகாப்பாக இருந்தால் நீண்ட நாள் நிச்சயம் வாழலாம் அப்படி வாழ்பவர்கள் இன்று நிறைய இருக்கின்றனர் என்றார். மேலும் வைரஸ் தாக்கபடபட்டவர்கள் சரியான மருந்து சாப்பிட்டு நன்றாக உள்ளவர்கள் இதே வைரஸ் தாக்கியவரை திருமணம் செய்து கொள்ளலாம் இன்று இது போல் நடக்கிறது தைரியமாக இருங்கள் என்று முகம் சுளிக்காமல் அன்போடு கூறினார்.
அவருக்குப்பின் வந்த ஒரு பெண் அதிகாரி அவரைப்போலவே நிதானமாகவும், நன்கு புரியும் படியும், எப்படி எதிர்கொள்ளலாம் என்று கூறி இரண்டு பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். பரிசோதனை விவரம் வந்த பின் தான் மருத்துவரை அனுகவேண்டும் என கூறி தைரியம் சொல்லி அனுப்பினார்...
அடுத்து இரண்டு நாட்களுக்கு அனைத்து பரிசோதனையும் செய்துள்ளனர் (முதல் நாள் மட்டும் நான் உடன் சென்றேன்) நண்பனின் தங்கைக்கு HIV இரத்தத்தில் கலந்து உள்ளது மற்றபடி உடலின் எதிர்ப்பு சக்தியினால் அது அடுத்த நிலைக்கு செல்லவில்லை உங்கள் உணவுகளை சத்து உள்ள உணவாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் நோய் தொற்றும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் உடலில் உள்ள கலோரின் குறையாமல் இப்போது இருப்பது போலவே இருக்க உணவு தான் முக்கியம். அரசால் இலவசமாக அளிக்கப்படும் மருந்துகளை கொடுத்து உள்ளனர்.
நம்பிக்கை மையம் நம்பிக்கை அளிக்கிறது.....
23 comments:
அரசு மருத்துவமணை இவ்வளவு சிறப்பாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி. பகிர்வுக்கும் நன்றி
எயிட்ஸுக்கு எதிரான விழிப்புணர்ச்சி தற்பொழுது மிகவும் அவசியமான ஒன்று!
நம்பிக்கை செழிக்கட்டும்
நண்பரின் தங்கைக்கும் இன்னும் நம்பிக்கை கூடட்டும்
நம்பிக்கை மையம் நம்பிக்கை அளிக்கிறது///
பதிவும் நம்பிக்கையூட்டும் வண்ணம் உள்ளது!!
மருத்துவ மனைகள் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..
நல்ல பதிவு சங்கவி..
பணம் சம்பாதிக்கலாம் வாங்க கூகிள் வழியா
Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India
//நம்பிக்கை மையம் நம்பிக்கை அளிக்கிறது..//
பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தாலும் நம்பிக்கை பலம்பெறும்.
நல்ல அவசியமான பதிவுங்க. நன்றி.
அருமையான தகவல்கள் கொண்ட பதிவு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மையமே!
நம்பிக்கை மையம் நம்பிக்கை அளிக்கிறது///
பகிர்வும் நம்பிக்கை அளிக்கிறது.
வாங்க வெறும்பய...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க தேவன்மையம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க கதிர்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க அருண்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க ஆருரன் விஸ்வநாதன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க அம்பிகா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க சித்ரா வாங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க நித்திலம்-சிப்பிக்குள் முத்து...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க சத்திரியன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாங்க தேனம்மை லெஷ்மணன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
ஆங்காங்கே நடைபெறுகிற சம்பவங்களை வைத்து மருத்துவமனைகளைப் பொதுமைப்படுத்தி, தனிமைப்படுத்துகிற பாங்கு தலைவிரித்தாடுகையில், சிறப்பாகச் செயல்படுகிற மருத்துவமனைகள் குறித்த இந்த இடுகை நமது நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக இருக்கிறது. அருமையான, தெளிவான, அவசியமான இடுகை நண்பரே!
இந்த நம்பிக்கை மையங்கள் தான் நம் நாட்டின் தற்போதைய நம்பிக்கைகள் :)
அவசியமான பதிவு அண்ணே :)
Post a Comment