அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா மற்றும் குதிரைச்சந்தை
ஆடி மாதம் கடைசி வாரத்தில் அந்தியூர் குருநாதசாமி திருவிழாவுடன் குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையும் தொடங்கும். இங்கு நடக்கும் குதிரை சந்தை இந்தியாவின் மிகப்பெரிய குதிரை சந்தை என்று கூறுவார்கள். அதே போல் மாட்டுச்சந்தையும். இந்த குதிரை சந்தை ஹைதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் தொடங்கப்பட்டது என்றும் போருக்காக குதிரை வாங்குவதற்கு இச்சந்தை மிக பிரபலம் என்பார்கள் ஆண்டு தோறும் 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள். இந்த வருடம் 5 இலட்சம் பேர் கூடுவார்கள் என்றும் அதற்கு தகுந்தாற் போல் தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்படடுள்ளது என்று கோயில் அறங்காவலர்கள் கூறினர்.

தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான கால்நடைகள் வளர்ப்புப் பிராணிகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் வருவர். இச்சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள குதிரைகள் ரகத்தில் காட்டியவாடி, நெக்ரா, நாட்டுக்குதிரை, மட்டக்குதிரை, ரேஸ் குதிரை, இங்கிலீஸ் பீட், பேபி குதிரை என பலவகை விற்பனைக்கு வந்துள்ளன.
குதிரையின் கவர்ச்சியான நிறம், ஆளுமை மிக்க கம்பீரத் தோற்றம், சுழி, வயது, ராசி என பல அம்சங்களைக் கொண்டு அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சுமார் 7 அடி உயரமுள்ள 4 வயது காட்டியவார் குதிரை 6 லட்சம் வரை விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வகை 6 மாத குட்டி 3 லட்சம் வரை விற்கப்படும்.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், பேரிரைச்சல் ஏற்படும் இடங்களில் கூட பதற்றமடையாமல் கம்பீரமாக அமைதியாக இருக்கும் "இங்கிலீல் பீட்’ குதிரைகள் விலை 3 லட்சம். இவ்வகை குதிரைகள் போலீஸôரின் ரோந்துப் பணிகள், பந்தயம், கடல்கரை, பூங்காக்களில் குழந்தைகளை அமர வைத்து உலா செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மாடுகளில் பர்கூர் செம்மறை மாடுகள், காளிகார், அம்ரித், ஆலாம்பாவி, தஞ்சை உம்பாச்சேரி, காங்கேயம் காளைகள் என பலவகை மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில், 6 அடிக்கு உயரமுள்ள காங்கேயம் காளைகள் ஜோடி 80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
திருப்பூர் வாரணவாசியைச் சேர்ந்த கோபிநாத், காங்கயம் காளை ரகத்தில் மயிலைக் காளை, செவளைக்காளை ஜோடி 1.50 லட்சத்துக்கு கேட்கப்படுவதாக தெரிவித்தார். சந்தைக்கு புதுவரவான மைசூர் மலையான் மாடுகள் ஜோடி 75 ஆயிரம். விவசாயப் பணிகளில் எவ்வகையாக இருந்தாலும் அசராமல் செய்யும் ஆந்திரத்தின் ஓங்கோல் ரக மாடுகள் ஜோடி 1.50 லட்சம். இவ்வகை மாடுகள் பல்லவர் காலத்து சிற்பங்களில் இவ்வகை மாடுகளே இடம்பெற்றுள்ளதாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி தெரிவித்தார்.
அதிகம் பால் கறக்கும் ஜெர்சி, சிந்து ரக பசுக்கள், கன்றுகள் பொள்ளாச்சி, கோவை, மைசூர் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆடுகளில் 4 அடி உயரமுள்ள ஜமுனாபாரி, நாட்டு ஆடுகள், கலப்பின ஆடுகள் என பலவகைகளும், கோழிகளில் ஈமு கோழி, நாட்டுக் கோழிகள், சண்டைக் கோழிகள் என பார்வையாளர்களைக் கவர்கின்றன.
கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள் மூக்கணாங்கயிறு முதல் அரசியல் கட்சிகளின் நிறக் கொடிகளின் நிறங்களில் சாட்டைகள் என பல வண்ணங்களில் அணி வகுத்துள்ளன. மேலும், அலங்காரப் பொருள்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளுக்குத் தேவையான பொருள்கள், விவசாயக் கருவிகள் அதிகளவில் வந்துள்ளன. விவசாயிகள் மற்றும் பல மாநில வியாபாரிகள், அதிகளவிலான கால்நடைகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், ஆயிரக்கணக்கில் அலை அலையாய் வரும் பார்வையாளர்கள் என கால்நடைச் சந்தை, விழாக் கோலம் பூண்டுள்ளது.

குதிரை மற்றும் திருவிழா படங்கள் அடுத்த பதிவில்.....
15 comments:
பழைய காலத்தில் குதிரைகள் அரபு தேசத்திலிருந்து இறக்குமதியாகின. வித்தியாசமான தகவல். படங்களுடன் விரைவில் வாருங்கள்.
neraya kelvip patturiukiren... ithuku peta amaipinar ethavathu ethirpu solrangala??
அந்தியூர்க்காரர் ஒருத்தர் நம்ப தோஸ்த்! இது பற்றி நிறையச் சொல்லுவாரு! இவ்வளவு சங்கதி இருக்கா? நல்ல பகிர்வு! :-)
ஹை....
நடனமாடும் குதிரை படத்தை எதிர்பார்க்கிறேன்...
:)
இன்னும் இவ்வளோ பெரிய சந்தை எல்லாம் நடக்குதா ? ஆச்சரியமான விஷயம் சார் , நல்ல பதிவு
///சுமார் 7 அடி உயரமுள்ள 4 வயது காட்டியவார் குதிரை 6 லட்சம் வரை விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.///
6 லட்சமா ..? நம்ம ஊர்ல நடக்குற செய்தி எனக்கே தெரியாம போய்டுச்சே ..!!
ஆச்சர்யமான விஷயம்.. அரிய தகவல்...
நல்ல பதிவு...
//குதிரையின் கவர்ச்சியான நிறம், ஆளுமை மிக்க கம்பீரத் தோற்றம், சுழி, வயது, ராசி என பல அம்சங்களை..//
பாருங்கப்பா, இதுக்கெல்லாம் கூட “அது”களையெல்லாம் பாக்கறாங்களாமில்ல.
//குதிரை மற்றும் திருவிழா படங்கள் அடுத்த பதிவில்..//
சீக்கிரம் படத்தைப் போடுங்கப்பு.
கண்ணன் சொல்றதுதான்! சீக்கிரம் படத்தப் போடுங்கப்பு!
பிரபாகர்...
Sangavi,
I remember the good old days when once the 'Aadi 18' festival is over in my native (Bhavani), all the shops (toys) will move to Andhiyur.
I have been to this festival. Very nice to remember them again.
Thanks
Arul
சீக்கிரம் படங்களை போடுங்களேன் பார்க்க ஆர்வமாக உள்ளது
சந்தை இறுதி நாளில்(சனிக்கிழமை) அங்கு வருவதாகத் திட்டம்..
மங்குனி அமைசர் said...
இன்னும் இவ்வளோ பெரிய சந்தை எல்லாம் நடக்குதா ? ஆச்சரியமான விஷயம் சார் , நல்ல பதிவு
repeatu.....
அரேபியகுதிரைக்கும், நமீதாவுக்கும் என்ன தல சம்பந்தம்?
Post a Comment