இத்தொடர் பதிவு எழுத என்னை அழைத்த கயலுக்கு என் நன்றி....
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சங்கவி
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எனது உண்மையான பெயர் சங்கமேஸ்வரன்.
இப்பெயர் வைக்க காரணம் என் மனைவியின் பெயர் கவிதா... எங்கள் இருவர் பெயரையும் சேர்த்து சங்கவி என்று ஆரம்பிச்சாச்சு...
இப்பெயர் வைக்க காரணம் என் மனைவியின் பெயர் கவிதா... எங்கள் இருவர் பெயரையும் சேர்த்து சங்கவி என்று ஆரம்பிச்சாச்சு...
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....
கூகுளில் எதாச்சையாக நடோடிகள் என டைப் செய்தேன் அப்போது வந்த விமர்ச்சனங்களைப் பார்த்தேன் அப்போது தான் வலைப்பதிவு என்ற விசயம் தெரியவந்தது. அப்புறம் என்ன தொடங்கியாச்சு...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமா நானா? நானும் தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்10, பேஸ்புக் அப்புறம் இருக்குற மெயில் ஐடிக்கெல்லாம் அனுப்புறேன் ஆனா படிக்கறாங்களான்னு தெரியல... (எப்படி பிரபலமாவது என இன்னும் யோசிக்கிறேன்)
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இருக்கறதுல பாதி பதிவு சொந்த பதிவுதான் நமது ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே... அதை அப்படியே பதிவாக்கிவிட வேண்டியது தான்....
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவின் மூலம் கோடி கொடுத்தாலும் நண்பர்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை நான் சம்பாரித்தது நண்பர்களை மட்டுமே....
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு பதிவு வைத்திருக்கிறேன் இரண்டும் தமிழ் பதிவுகள் தான் ஒன்று சங்கவி இன்னொரு பதிவு கிராமத்துக்காரன்...
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது ஏன் எனில் எழுத்து என்பது அவர்களுடைய சுதந்திரம்.. பொறாமை கொஞ்சம் நஞ்மல்ல நிறைய உண்டு அழகா கவிதை எழுதுறாங்க, அழகா கதை எழுதறாங்க, அழகா விமர்ச்சனம் எழுதுறாங்க நமக்கு வர மாட்டேங்குதே அப்படின்னு எல்லார் மேலேயும் பொறாமை உண்டு...
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
என் பதிவைப் பார்த்து முதன் முதலில் பாராட்டியது மணிஜீ தான்..
நிறைய தகவல்கள் கொடுத்து எழுதச்சொன்னதுடன் என்னை வலைபதிவர்களிடம் அறிமுப்படுத்தியது இவர்தான்...
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னைப்பற்றி பதிவுலகம் தெரிந்து கொள்ள வேண்டிய அணைத்தும் என் பதிவுகளில் இருக்குது எல்லாம் படிங்க என் சேட்டை அங்க தெரியும்.....
இப்பதிவை தொடர இதை படிப்பவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்... நிறைய பேர் எழுதி இருப்பீங்க எழுதாதவங்க எல்லாரும் எழுதுங்கோ.............
46 comments:
நீங்க இவ்ளோ நல்லவரா???? :))
ம்ம் தெளிவான பதில்கள் :)
வலைப்பதிவில் நீங்கள் நுழைந்த அனுபவம் வித்யாசமாயிருக்குங்க அண்ணே
ஆஹா உங்க பெயர் காரணம் இன்று தான் தெரிந்தது. மனைவி பேரை சேர்த்து வைத்துள்ளீர்கள்.. அருமை
தெளிந்த நீரோடை போன்ற அறிமுகமாக இருக்கிறது உங்களின் இந்தப் பதிவு.
நல்ல பதில்!!!
வாழ்த்துக்கள்!!!
அற்புதமான பதில்கள்
//இருவர் பெயரையும் சேர்த்து சங்கவி ///
நான் உண்மைலேயே இது இலக்கியத்துல வர்ற பேருன்னே நினைச்சுட்டிருந்தேன் ..!!
அனைத்து பதில்களும் மிகவும் அருமை...
பெயர் காரணம் சூப்பர்.. பாருங்க.. இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது நீங்க பெரிய ஆளா வருவீங்க.. அது தான் மனைவி பெயர சேர்த்தாச்சே...
பெயர்க்காரணம் அழகு. எழுதலாமா என்று யோசித்தேன். (யாரும் அழைக்காததே காரணம்!) இப்போது யோசனை இல்லை. காரணம் நீங்கள் அழைத்துவிட்டீர்கள். நன்றி. பதில்கள் எதார்த்தம்.
ஸ்ரீ....
சங்கவி,
பெயருக்குப் பின்னால் பெரிய்ய்ய்ய்ய்ய கதை இருந்திருக்கே.
உமைக்கு சிவன் பாதி உடலைக்கொடுத்தது போல , நீங்க பாதி பெயரைக் கொடுத்துட்டீங்க. ம்ம்ம்ம்!
அண்ணி, இனியாவது அண்ணன நல்லா கவனிங்க.
அடச்ச! ஃபிகர்ன்னு நெனச்சு ஏமாந்துட்டனே!
///ராஜன் said...
அடச்ச! ஃபிகர்ன்னு நெனச்சு ஏமாந்துட்டனே!//
ரசிகன்யா நீயீ..
அழகான் பெயர் சங்கவி ... சங்..+..கவி = சங்கவி .. excellent.
//அடச்ச! ஃபிகர்ன்னு நெனச்சு ஏமாந்துட்டனே!//
பங்காளி எப்படி இப்படி!?
ம்ம்.. நடத்துங்க..
பதில்கள் அனைத்தும் நச்சுன்னு எழுதியிருக்கீங்க தலைவரே...
Hi,
Sangameswaran is a known and common name in my native town.
Nice job.
Thanks
Arul
வாங்க நாஞ்சில் பிரதாப்....
அட பாவமே இப்படி ஒரு கேள்வி கேட்டுபுட்டீங்களே.........
வாங்க ஸ்ரீ
நீங்களும் எழுதுங்க...
வாங்க வெறும்பய...
உங்க வாக்கு பலிக்குமான்னு பார்ப்போம்....
வாங்க ப.செல்வக்குமார்...
இலக்கியம் என்றால் எனக்கு என்ன வென்றே தெரியாதுங்க...
வாங்க பொன்ராஜ்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க தமிழ் உதயம்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க பின்னோக்கி...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க மோகன்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க ஜில்....
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க அருள்...
நீங்க பவானியா?
வாங்க பாலாசி...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க திருஞானசம்பத்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க அருண்...
உங்க பங்காளி எப்பவுமே இப்படித்தான் கிண்டல்அடிப்பாரா?
வாங்க நிலாமதி...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க தல மணிஜீ...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க ராஜன்...
என்ன செய்வது பிகர் பேர வைச்சாத்தா பதிவு பக்கம் சில பேர் வராங்க..
வாங்க சத்ரியன்...
கணவன் மனைவி பாதி பாதி தானே...
பாசாங்கு இல்லாம எழுதியிருக்கீங்க! வாழ்க வளமுடன்! :-)
Yes Sangavi,
I am from Bhavani. (Sorry, i am not setup yet to do 'comments' in Tamil yet).
Thanks
Arul
அருள்....
நானும் பவானி பக்கத்தில் தான் சித்தார் என்ற கிராமம்... உங்க மெயில் ஐடி கொடுங்க...
அற்புதமான பதில்கள்
nice one ...Simple & clear answers
தல நீங்க வேலை செய்வது கோவைதான ?? ஒரு மெயில் தட்டுங்க அப்பு, அங்க வந்த பாக்கலாம்
உண்மையான பகிர்வு சங்கவி.. அருமை
நல்ல பதில்கள்... உங்கள் இந்த யூத் புல் விகடனில் வந்துள்ளது.... வாழ்த்துக்கள்
சங்கு எல்லாரையும் ஏமாத்திப்புட்டிங்களே
enakku ezhudhuvadhil aarvam adhigam aanal ennai ookkuvikkavum vimarsikkavum yaarenum enadhu padaippugalai padippaargala ena sandhegam ungaladhu udhaviyum aalosanaigalayum edhir parkiren...
endrum anbudan,
Niyaz dubai....
அடுத்தமுறை பார்க்கும் போது மணிஜிக்கு இருக்குதுடி.. ஏன் இந்த வேண்டாத வேல அவருக்கு.? :-))
அருமையான பதில்கள்
Post a Comment