குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஓர் அழகான விசயம் வைக்க வேண்டியதும் கட்டாயம்.பெயர் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் பெற்றோர் மற்றும் வீட்டு பெரியவர்கள் சம்மத்துடன் வைப்பது முன்பு எல்லாம் தனது தாத்தா பாட்டி பெயரை பேரனுக்கு வைப்பார்கள். அப்புறம் சாமி பெயர் வைப்பார்கள் இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு கனவுடன் பெயரிடுவார்கள்.
ஒரு சிலர் கணவனும் மனைவியும் தங்கள் பெயரில் இருந்து சில எழுத்துக்களை எடுத்து ஒரு அழகான பெயரை வைப்பார்கள் இன்னும் சிலர் தங்களது முன்னால் காதலி அல்லது காதலன் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வார்கள். நம் தமிழ் மக்கள் சிலர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்கின்றனர்.
குழந்தையின் அப்பா அம்மா பார்த்து பெயர் வைத்துக் கொண்டு இருக்கும் போது இடையில் இப்போது நியூமராலஜி என்னும் பெயரில் இத்தனை எழுத்துக்கள் தான் வரவேண்டும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இதற்கு இந்த முதல் எழுத்து தான் இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பெயர் வைக்க வேண்டிய நிலைமையில் சிலர்.
எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் பெயர் வைக்கவில்லை. மூன்று மாதம் கழித்து தான் பெயர் வைக்க வேண்டுமாம் இது தான் சம்பிரதாயம் என எங்க வீட்டில் சொல்லிவிட்டனர். வைகாசியில் மகன் பிறந்தான் ஆனி முடிந்து ஆடியில் தான் வைக்க வேண்டும் என கூறிவிட்டனர். ஆடி ஆகாது ஐந்தாவது மாதத்தில் வைக்கலாம் என்றால் அது புரட்டாசி மாதம் அப்போது நல்ல மாதம் இல்லையாம் என்ன செய்வது என்று யோசித்து ஆடி மாதத்தில் எங்க ஊரில் மிகப்பிரபலமான திருவிழா வருகிறது அன்று வைக்கலாம் என்று ஒரு வழியாக முடிவு செய்து விட்டோம்.
மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் இங்கு தான் கருத்து யுத்தம் நடக்கிறது. நான் அழகான தமிழ் பெயர் வைக்கலாம் சொல்லிக்கொண்டு இருக்க அதெல்லாம் முடியாது என்ன நட்சத்திரம், இராசி பார்த்து தான் பெயர் என எங்க அம்மா ஆரம்பித்துவிட்டார் குடும்பத்தில் உள்ள 25 பேரும் என் மனைவி உட்பட எல்லாம் ஆமாம் என சொல்ல நான் அமைதியாகிவிட்டேன். ஜோதிடர் மகனுக்கு ப, பி என்ற முதல் எழுத்தில் தொடங்கும் பேர் வையுங்கள் கூட்டுத்தொகை 3 வர வேண்டும் என சொல்லிவிட்டார். நானும் தமிழ் பெயரை தேடி கூட்டுத்தொகை 3 வருமாறு பார்த்தால் ஒன்னும் சரிவரல. இப்ப வட மொழி எழுத்துடன் சேர்த்து கூட்டுத்தொகை 3 வருமாறு பெயரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
ப, பி என்னும் முதல் எழுத்தில் தொடங்கும் அழகான பெயரை நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பெயரை சொல்லுங்க....

12 comments:
பகலவன்
பரிதி
பரந்தாமன்
பாலாஜி
எனக்கு ந்யுமராலாஜி தெரியாது . இதில் எதாவது சரி வந்தால் பாருங்கள். உங்கள் மகனின் நட்சத்திரம் என்ன
பரணி
பிரளயன்
பிரபஞ்சன்
பரி அழகன்
பரிதி
இதோ சில் பெயர்கள்....பவன் ....பிருந்தன் ...பிரையன் ...பிரவீன் ...பஞ்ச சீலன் ..பகீரதன்... பதுமன் ....பாமன் ..பிருந்தாவன்
புருஷ்தமன் புவனன் புஷ்பாகரன் புஷ்பன் புனிதன் பால சேகரன் ....பால ரஞ்சன் ..பிரகலாதன் .
பல்லவன்
பகலவன்
பன்ளீர் செல்வம்
பன்னீர் செல்வன்
பார்த்தீபன்
பயலேவுனக்கு
படிப்படியாய்
பலரும்
பலப்பல
பெயர்களை
பரவசத்துடன்
பட்டியலாய்
பதிவுசெய்வதை
பார்க்க
பாங்காய்த்தானிருக்கிறது !
பலே!
உங்கள் ஈமெயில் அட்ரஸ் குடுங்க.
Pranav
௧) பிரத்யும்னன்
௨) பிரசஞ்சித்
பிரபாகரன்
நல்ல பெயர் கிடைக்க வாழ்த்துக்கள்.
நம்மாள இவ்வளவு தான் முடியும்.
என் பையனுக்கு பெயர் வைக்க நா பட்டபாடு தனிக்கத :)
http://vaarththai.wordpress.com
நல்லதொரு பேர் எடுக்க குழந்தைக்கு வாழ்த்துகள்.
piranav(பிரணவ்)
Post a Comment