இன்று உலகம் கோப்பை கால்பந்து திருவிழா அரங்கேறி நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. உலக வரைபடத்தில் தேடிப்பார்த்தால் கண்ணுக்கு தெரியாத நாடு எல்லாம் விளையாடிக்கொண்டு இருக்கிறது. 100 கோடி மக்கள் உள்ள நம் நாட்டில் ஒரு 11 பேர் கிடைக்கவில்லையா? உலகில் 7 வது பெரிய நாடு நம் நாடு என்று பெருமை பட்டுக்கொள்கிறோம். ஆனால் இங்கு கால்பந்து விளையாட ஆள் இல்லை என்கிறார்கள். விளையாட ஆள் இல்லையா? இல்லை நம் மக்களுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இல்லையா?
சத்தியமாக ஆர்வம் இருக்கிறது இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் நம் இந்திய மக்கள் ஆசிய கோப்பையை விட கால்பந்து போட்டியையே அதிகம் ரசிக்கின்றனர் என்று ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது. விளையாட்டை நம் ஆட்கள் ஊக்குவிப்பது இல்லை அது தான் உண்மை.
நமது நாட்டில் கால்பந்து அணி இருக்கிறது ஆனால் நம் அணி தகுதிச்சுற்றுக்கு சென்றால் போன விமானத்திலேயே திரும்பி விடுகிறார்கள்.
உலகில் ஒலிம்பிக் நடக்கிறது நம் இந்தியர்கள் 2 வெண்கலம் மட்டும் வாங்கி வருகிறார்கள் இவர்களை 100 கோடி பேரும் பாராட்டுகிறோம். 2 வெண்கலத்துக்கே இப்படி என்றால் 50 தங்கம் வாங்கி வந்தால் 2 நாட்கள் அரசாங்க விடுமுறை நிச்சயம். நம் மக்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் அரசாங்கம் பாராட்டுகிறதோ இல்லையோ நம் நாட்டு இளைஞன் அவன் ஊரில் ஒரு பேனர் கட்டி பெருமை கொள்கிறான்.
மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுக்கு என ஒரு தனி அமைச்சர் உள்ளார் அவர் இதற்காக என்ன முயற்சி எடுத்தார் என்று தெரியவில்லை அப்படியே அமைச்சர் முயற்சி எடுத்து ஒரு அணியை உருவாக்கினால் அவருக்கு உயர் பதவியில் உள்ள இன்னொருவர் இது எனக்கு வேண்டிய பையன் இவனை களத்தில் இறக்கு என பல போன்கள் வரும் அப்ப அந்த அணி என்ன ஆகும் நாசமாகத்தான் போகும். இதனால் தான் நம் நாட்டில் எந்த விளையாட்டும் சோபிக்காமல் போனதுக்கு காரணம்.
சென்னையை சேர்ந்த ஒரு ஏழை மாணவி கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். அதற்கு அம்மாணவி விளம்பரதாரர் பிடித்து விளையாட்டுப் போட்டிக்கு செல்வதற்குள் படாது பாடு பட்டார் பத்திரிக்கைகள் உதவியதால் அரசாங்கம் உதவி செய்து உலக சாம்பியன் பட்டம் பெற்றார். அந்த பெண்ணைப்பற்றி எந்த பத்திரிக்கையிலும் சிறப்பு பேட்டிகள் எல்லாம் இல்லை. அந்த பெண்ணின் பெயர் கூட மறந்து இருப்போம். அப் பெண்ணின் மூலம் கேரம் விளையாட்டை பிரபலப்படுத்தி இருந்தால். இன்று நம் நாட்டில் நிச்சயம் நிறைய அற்புதமான கேரம் வீரர்கள் இருப்பார்கள் அவர்கள் திறமை வெளியே தெரியவரும்.
100 கோடி மக்களில் 11 கால்பந்து வீரர்கள் இருக்க மாட்டார்காளா? நிச்சயம் இருப்பார்கள் அவர்கள் யார் என சரியாக நாம் தேர்ந்தெடுக்க வில்லை என்பதே உண்மை. அரசாங்கம் சரியான வழிகாட்டியாக செயல்பட்டு பள்ளியில் இருந்தே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேர்மையாக வீரர்களை தேர்வு செய்தால் நாமும் உலகில் பல சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உண்டு.

17 comments:
கண்டிப்பா வெல்லலாம்.. கவனம் எடுத்தாங்கன்னா.
நல்ல பதிவு.
not only sports , neriya visayangal recognization illa , appreciation illa , athu than brain drain athikam aaguthu
எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவிபார்கள். ? முதலில், விளையாட்டை, தனியார் பொறுப்பில் விட வேண்டும். ஆண்டுக்கு அஞ்சு கோடிதான் தருவேன். எல்லா விளையாட்டுக்கும் அதை உபயோகப் படுதுன்னு சொன்னா??
சங்கவி அவர்களே..
கண்டிப்பா இதுபோல விளையாட்டை பெற்றோர்களும், அரசும் கண்டிப்பா மதிக்கனும். ஏனென்றால் நானும் இதுபோல் மாநில அளவு வரைக்கும் வந்து திரும்பி தேசிய அளவுக்கு போக முடியாத ஆட்களில் நானும் ஒருத்தி... ஆகையால் நம்நாட்டில் மட்டும் அந்த விழிப்புண்ர்வே மக்களிடம் கம்மியாகதானிருக்கிறது.....
all district need internationel level stadium.
உண்மை..சங்கவி.
மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுக்கு என ஒரு தனி அமைச்சர் உள்ளார் அவர் இதற்காக என்ன முயற்சி எடுத்தார் என்று தெரியவில்லை அப்படியே அமைச்சர் முயற்சி எடுத்து ஒரு அணியை உருவாக்கினால் அவருக்கு உயர் பதவியில் உள்ள இன்னொருவர் இது எனக்கு வேண்டிய பையன் இவனை களத்தில் இறக்கு என பல போன்கள் வரும் அப்ப அந்த அணி என்ன ஆகும் நாசமாகத்தான் போகும். இதனால் தான் நம் நாட்டில் எந்த விளையாட்டும் சோபிக்காமல் போனதுக்கு காரணம்.
...... vethanaiyaana unmaigalil ondru. :-(
நமது அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் பெரும்பாலும் வேலைக்க்காகதவர்கள். ஏனனில், வேலைக்க்காகதவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் அப்பிடித்தானே இருக்க முடியும். ஆனால் இந்த அரசியல்வாதிகளை நாம் தான் தெர்தேடுகிறோம். வோட்டு போடும் முன் சற்று யோசித்தால் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்.....
சிந்திக்கவைக்கும் அருமையான கட்டுரை நண்பரே..! திறமைசாலிகள் அதிகளவில் இந்தியாவில் இருந்தாலும் அரசியல் பெருச்சாளிகள் அதிகளவில் நம்நாட்டில் நடமாடும் வரை நாம் எந்த விளையாட்டிலம் முன்னணி வகிக்க முடியாது..! பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதால் திறமைகள் அதில் புதைக்கப்படுகின்றது என்பதை அருமையாக எடுத்துக் கூறியிருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றி..!
கால்பந்தா? விளையாட எங்க கிரவுண்ட் இருக்கு? நண்பா?
எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது...
காக்கா... குயில் மேல ஆசை படலாம்...
மயில் மேல ஆசை படகூடாது... (பழமொழி சரியானு தெரியல... ஆனா அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்...)
Hi,
We have the world best players not in Ground but in Bed!
like Nithyanda...
//கால்பந்தா? விளையாட எங்க கிரவுண்ட் இருக்கு? நண்பா? //
பிரேசில், அர்ஜெண்டைனா நாடுகளில் உள்ளதைவிட நல்ல மைதானங்கள் நம்மிடம் இருப்பதாகவே தெரிகிறது.
பீலேயின் வரலாறு அனைத்து தமிழக நூலகங்களிலும் இருக்கும். எடுத்துப் படித்துப் பாருங்கள்
//////100 கோடி மக்கள் இருந்து என்ன செய்வது?///////
வேடிக்கை பார்ப்பத்துடன் மறந்துபோகிறோம் அனைத்தையும் . இந்த நிலை மாறவேண்டும் .
இன்னும் டீ வரல
இன்னைக்கு கலைஞர் செய்தி டீவியில் ஒரு இந்திய புட்பால் பிளேயர் சொன்னதை சரிபார்க்காமல் சொல்லிட்டேன் ::)
http://www.worldstadiums.com/asia/countries/india.shtml
//00 கோடி மக்கள் உள்ள நம் நாட்டில் ஒரு 11 பேர் கிடைக்கவில்லையா?//
எல்லோரும் கிரிக்கெட் மைதானத்தையே ஆன்னு பார்த்துட்டு இருங்க.111 நல்லாவே கிடைக்கும்.
//கண்டிப்பா இதுபோல விளையாட்டை பெற்றோர்களும், அரசும் கண்டிப்பா மதிக்கனும். ஏனென்றால் நானும் இதுபோல் மாநில அளவு வரைக்கும் வந்து திரும்பி தேசிய அளவுக்கு போக முடியாத ஆட்களில் நானும் ஒருத்தி... ஆகையால் நம்நாட்டில் மட்டும் அந்த விழிப்புண்ர்வே மக்களிடம் கம்மியாகதானிருக்கிறது.....//
முந்தைய பின்னூட்டத்துக்கு கட்டியம் சொல்லும் உண்மை.
Post a Comment